விடாமுயற்சி

விடாமுயற்சிஒரு அழகிய கிராமத்தில் ஒரு பையன் இருந்தான். அவன் பெயர் கவின் .அவனுக்கு  சதுரங்கம் விளையாடுவதென்றால் மிகவும் பிடிக்கும்.கவின் தன் கிராமத்தில் உள்ள  நண்பர்களுடன் எப்பொழுதும் சதுரங்கம் விளையாடிகொண்டிருப்பான். பல  நேரங்களில் அவன் வெற்றியும் பெறுவான்.ஒரு நாள் அவனுடைய நெருங்கிய நண்பன் அவனிடம் போட்டிகளில் கலந்து கொண்டால் உனக்கு நிறைய வெற்றிகள் கிடைக்கும் என்று  கூறினான்.அவ்வாறே கவின் பல போட்டிகளில் கலந்து கொண்டான் . அவனால் வெற்றி பெற முடியவில்லை.அவன் மிகவும் சோர்ந்து போனான்.ஒரு நாள் கவின் போட்டி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் ஒரு மரத்தில் சிலந்தியின் வலையை பார்த்தான் .அப்பொழுது சிலந்தி ஒன்று வலையில் ஏற முயற்சி செய்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அந்த சிலந்தி ஏறும் பொழுது கீழே விழுந்தது. பலமுறை முயற்சி செய்து இறுதியாக வலையை சென்றடைந்தது . சிலந்தியின் விடாமுயற்சியை கண்ட கவின், நானும்  ஏன் முயற்சி செய்யகூடாது என்று நினைத்தான்.அன்று முதல் கவின் தன் தவறுகளை திருத்திக் கொண்டு விடாமுயற்சியுடன் விளையாடி போட்டிகளில் வெற்றி பெற்றான்.பல பரிசுகளையும் பெற்றான். கருத்து : முயற்சி திருவினையாக்கும்.Click to Read an Interactive version of this story here