மாயா என்ற மான்

மாயா என்ற மான்

கண்மணி அன்பு துரைக்கண்ணன்ஒரு காட்டில் மாயா என்ற மான் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அது  ஒரு மனிதரைப்  பார்த்தது. தானும் அவரைப் போல ஒரு மனிதனாக  வேண்டும் என விரும்பியது.பக்கத்து ஊரில் ஒரு மாயக்காரி இருப்பதைக் கேள்விப்  பட்டது. அந்த மாயக்காரியிடம் சென்று தன்னை ஒரு மனிதனாக மாற்றுமாறு கேட்கப் புறப்பட்டது.Double click to add text here…

போகும் வழியில் சில மனிதர்கள் மிகவும் ஏழையாக இருப்பதைப் பார்த்தது. சில மனிதர்கள் மிகவும் வசதியாகப் பெரிய வீடுகளில் வசிப்பதைப் பார்த்தது.இன்னும் சற்று தூரத்தில் தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை மற்றும் குப்பைகளால் ஊரெங்கும் மாசடைவதைக் கண்டது.Double click to add text here…

Double click to add text here…

Double click to add text here…

Double click to add text here…

Double click to add text here…

Double click to add text here…

Double click to add text here…

மதங்களின் பெயரால்  மனிதர்கள் தஙகளுக்குள் சண்டை போடுவதைப் பார்த்தது.சில இடங்களில் ஆண் குழந்தைகளும்,பெண் குழந்தைகளும்  சமமாக வளர்க்கப்படாததைப் பார்த்தது. பெண்  குழந்தைகள் படிக்கக் கூட  அனுமதிக்கப்படாததைக் கண்டது.காட்டில் விலங்குகள் ஏழை  பணக்காரன் என்ற எந்த  வேறுபாடும் இல்லாமல்   வாழ்வதை நினைத்துப் பார்த்தது.காட்டில் தான் வாழ்ந்த சுத்தமான சூழலை எண்ணிப் பார்த்தது.  விலங்குகள் மனிதர்களைப் போல் காட்டை மாசு படுத்தாமல்  வாழ்வதை நினைத்து மகிழ்ந்தது.நல்ல வேளை தஙகளுக்குள் எந்த மத வேறுபாடும் இல்லை என நினைத்துப் பெருமைப் பட்டுக் கொண்டது.காட்டில் மான்கள் ஆண், பெண் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் சமமாக வாழ்வதை எண்ணி பெருமிதம் கொண்டது.எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்து விட்டு, மனிதனாக வாழ்வதைக் காட்டிலும் மானாக வாழ்வதே மேல் என முடிவு செய்தது. மீண்டும் காட்டிற்குத் திரும்பிச் சென்று மானாக இன்பமாக  வாழ்ந்தது.
Click to Read an Interactive version of this story here